காணொளி: துப்பாக்கிச் சூடு நடத்தியவரை துணிச்சலாக எதிர்கொண்ட நபர்
ஆஸ்திரேலியாவின் போன்டி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை அங்கிருந்த ஒருவர் துணிச்சலாக எதிர்கொண்ட காட்சி இது.
போலீஸார் கூற்றுப்படி, யூத சமூகத்தை குறிவைத்து நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹனுக்கா எனப்படும் யூத பண்டிகையை கொண்டாடுவதற்காக 1000-க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் குவிந்திருந்ததாக காவல்துறை கூறுகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் காவலில் இருப்பதாகவும் காவல்துறை கூறி உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு