• Tue. Dec 16th, 2025

24×7 Live News

Apdin News

ஆஸ்திரேலியா: போன்டை கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் பற்றிய விவரம்

Byadmin

Dec 16, 2025


உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

பட மூலாதாரம், AFP via Getty Images

ஆஸ்திரேலியாவின் போன்டை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் பலர் ஹனுக்கா எனப்படும் யூத பண்டிகையின் முதல் நாளைக் குறிக்கும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

பலியானவர்களில் இரண்டு யூத மத ரபிகள், யூத இனப்படுகொலையில் இருந்து தப்பிய ஒருவர் மற்றும் 10 வயது சிறுமி ஆகியோரும் இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களைப் பற்றி தெரிந்தவை இங்கே:

மட்டில்டா, 10


போன்டை  கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் பற்றிய விவரம்

10 வயது சிறுமி பலியானவர்களில் ஒருவர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த சிறுமியின் பெயர் மட்டில்டா என உள்ளூர் ஊடகங்களிடம் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

By admin