• Tue. Aug 12th, 2025

24×7 Live News

Apdin News

ஆஸ்திரேலிய அணியை அச்சுறுத்தும் தமிழர்: யார் இந்த செனுரன் முத்துசாமி ?

Byadmin

Aug 11, 2025


தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட தென் ஆப்ரிக்க வீரர் செனுரன் முத்துசாமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட தென் ஆப்ரிக்க வீரர் செனுரன் முத்துசாமி

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பலர் பல்வேறு வெளிநாட்டு அணிகளுக்காக கடந்த காலங்களில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர், தற்போதும் சிலர் விளையாடி வருகிறார்கள்.

ஆனால், தமிழகத்தை வேராகக் கொண்டு வெளிநாட்டு அணிகளுக்காக கிரிக்கெட் விளையாடியது மிகச் சிலர்தான். கடந்த காலங்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக ஆல்வின் ஐசக் காளிச்சரண், மகிந்திரா நாகமுத்து, சிவ்நரேன் சந்தர்பால் உள்ளிட்ட சில வீரர்கள் விளையாடியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணியில் தமிழர்

தென் ஆப்ரிக்க அணியில் இதற்கு முன் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஹசிம் ஆம்லா, கேசவ் மகராஜ் உள்ளிட்டோர் விளையாடி இருந்தாலும், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட வீரர் ஒருவர்கூட விளையாடியதில்லை. அந்த குறையைப் போக்கும் விதத்தில் முதல்முறையாக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட செனுரன் முத்துசாமி இடம் பெற்று விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

செனுரன் முத்துசாமியின் டெஸ்ட் போட்டி அறிமுகமே அமர்க்களமாக இருந்தது. 2019ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய முத்துசாமி விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்து, வாழ்வில் மறக்க முடியாத வகையில் முதல் டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார். நீண்ட இடைவெளிக்குப்பின் தற்போது தென் ஆப்ரிக்க டி20 அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பந்துவீச்சில் மிரட்டி வருகிறார்.

By admin