• Mon. Oct 14th, 2024

24×7 Live News

Apdin News

இங்கிலாந்தின் எதிர்கால மன்னர் பீட்ஸா வல்லுநராக வர விரும்பம் தெரிவிப்பு!

Byadmin

Oct 14, 2024


இங்கிலாந்து மன்னர் சார்லஸின் பேரனும் இளவரசர் வில்லியமின் மூத்த மகனுமானவர் இளவரசர் ஜார்ஜ்.

இவர், இங்கிலாந்தின் எதிர்கால மன்னர் என்று கருதப்படுகிறார்.

மன்னர் பதவியே இருந்தாலும் அவருக்கென ஓர் ஆசை இருப்பதாக People இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதாவது, 11 வயதுடைய இளவரசர் ஜார்ஜ் சமையல் வல்லுநராக வேண்டும் என்று விரும்புவதாகவும் குறிப்பாக பீட்ஸா வல்லுநராக வேண்டும் என்பது அவரின் கனவு எனவும் தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் அவர் தமது தாய் உட்பட மேலும் சிலருடன் ஓர் உணவகத்திற்குச் சென்றிருந்ததாக சுட்டிக்காட்டிய People தளம், அப்போது இளவரசர் ஜார்ஜ், பீட்ஸா வல்லுநராக வேண்டும் என்கிற தமது விருப்பத்தைத் தெரிவித்ததாக அந்த உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

By admin