0
இங்கிலாந்திலும் வேல்ஸிலும் Conall புயல் அதிகமான இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது.
தென்கிழக்கு இங்கிலாந்தில் கன மழை பெய்து வருகிறது. இங்கு பல பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை (27) காலை நிலவரப்படி, இங்கிலாந்தில் 99 வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் Northamptonshire இல் உள்ள நெனே நதிக்கும் (River Nene), வேல்ஸில் 4 பகுதிகளுக்கும் “கடுமையான உயிர் ஆபத்து” ஏற்படும் பகுதிகளாக எச்சரிக்கை அறிவிப்புகள் உள்ளன.
நேற்று முதல் இன்று மதியம் வரை தெற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் பல பகுதிகளில் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக டார்ட்மூரில் கிட்டத்தட்ட 50 மில்லிமீட்டர் மழையும், தெற்கு இங்கிலாந்தின் பிற இடங்களில் பரவலாக 20-30 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது.
இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருவதால், டோர்செட், சசெக்ஸ், சர்ரே, கிரேட்டர் லண்டன், எசெக்ஸ் மற்றும் கென்ட்டைச் சுற்றியுள்ள சில இடங்களில் மழைப்பொழிவு சற்று கூடுதலாக உள்ளது.
இந்த பகுதிகளுக்கு வானிலை அலுவலகத்தால் விடுக்கப்பட்ட மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை மதியம் வரை அமலில் உள்ளது.