0
இங்கிலாந்து – வேல்ஸில் இலங்கைப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர், 32 வயதுடைய “நிரோதா” என அழைக்கப்படும் தோனா நிரோதா கல்பானி நிவூன்ஹெல்ல என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வேல்ஸ், கார்டிஃப் நகரில் வசித்த இப்பெண், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெற்கு வேல்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
ஓகஸ்ட் 21ஆம் திகதி காலை 7:37 மணிக்கு அவசர சேவைகளுக்கு வந்த தொலைபேசி அழைப்பின் பேரில் ரிவர்சைடின் தெற்கு மோர்கன் பகுதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
அங்கு ஒரு பெண் படுகாயங்களுடன் காணப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் 37 வயதுடைய மற்றுமோர் இலங்கையர் அருகிலுள்ள பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் இடம்பெற்ற பகுதியைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகள் அல்லது டேஷ்கேம் காட்சிகளை வழங்குமாறு, பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.