0
இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் (Birmingham) நகரில் சமீபத்தில் வானம் இளஞ்சிவப்பு நிறமாக மாறி காட்சியளித்தமை பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது சூரியன் மறையும் நேரத்தில் ஏற்பட்ட இயற்கை மாற்றமா அல்லது Northern Lights எனப்படும் அரோரா ஒளி நிகழ்வா என பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால், இந்த காட்சிக்கு இயற்கை நிகழ்வுகள் காரணம் அல்ல எனத் தெரியவந்துள்ளது.
நகரில் உள்ள ஒரு காற்பந்து மைதானத்தில் பயன்படுத்தப்பட்ட இளஞ்சிவப்பு LED விளக்குகளே இந்த அபூர்வ காட்சிக்குக் காரணமாக அமைந்துள்ளன. தற்போது ஐரோப்பா முழுவதும் பனிக்காலம் நிலவுவதால், பர்மிங்ஹாமிலும் பனிப்பொழிவு மற்றும் அடர்ந்த மேகங்கள் காணப்படுகின்றன. இந்த பனியும் மேகங்களும் மைதானத்தில் இருந்து வெளிப்பட்ட இளஞ்சிவப்பு விளக்குகளின் ஒளியை பிரதிபலித்ததால், அந்த ஒளி நகரம் முழுவதும் பரவி வானமே இளஞ்சிவப்பாகத் தோன்றியுள்ளது.
இந்த அரிய நிகழ்வை BBC ஊடகம் செய்தியாக வெளியிட்டுள்ளது. மேலும், சில நாட்களுக்கு முன்னர் அருகிலுள்ள ஹெட்நெஸ்ஃபொர்ட் (Hednesford) நகரிலும் இதேபோன்ற ஒரு சம்பவம் பதிவாகியிருந்தது. செயற்கை ஒளி மற்றும் இயற்கை வானிலை இணைந்தால் எவ்வளவு விசித்திரமான காட்சிகள் உருவாக முடியும் என்பதற்கான உதாரணமாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.

