• Mon. Mar 31st, 2025

24×7 Live News

Apdin News

இங்கிலாந்தில் ஓட்டுநர் இல்லாத கார்களை செயற்படுத்த சோதனை!

Byadmin

Mar 26, 2025


இங்கிலாந்தில் ஓட்டுநர் இல்லாத கார்களை செயற்படுத்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நவீனத் தொழில்நுட்பம், உணர்கருவிகள் மற்றும் அதி திறன்கொண்ட கேமராக்கள் என பல அம்சங்களை இந்த ஓட்டுநர் இல்லாத தானியக்க கார்கள் கொண்டுள்ளன.

அத்துடன், இந்த கார்கள் எல்லாத் திசையிலும் நடப்பதைக் கவனிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளன.

மேலும், தானியக்க காரில் உள்ள கேமராக்கள் வீதிகளையும் மற்ற வாகனங்களையும் கவனிப்பதுடன், அவை பாதசாரிகளையும் கவனிக்கின்றன. அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு, அவர்கள் வீதியைக் கடக்கப்போகிறார்களா இல்லையா என்பதைக் கணித்துவிட முடியும்.

பாதையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் தரவுகளைப் பெறும் ஆற்றலும் இக்கார்களுக்கு உண்டு. அதனால் ஒரு வளைவை நெருங்கும்போது, அதற்குப் பின்னால் வேறு வாகனம் ஏதேனும் நிறுத்தப்பட்டிருக்கிறதா என்பதை முன்கூட்டியே அறிந்து கார் அதைச் சுற்றிப்போகும். அதனால் போக்குவரத்து சுமுகமாகிறது.

இதையும் படியுங்க : இலண்டனின் முதல் நிரந்தர நேரடி முக அடையாளம் காணும் கெமராக்கள்

ஓட்டுநர் இல்லாமல் வீதியில் செல்ல உதவும் அடிப்படை அம்சங்களை உருவாக்குவதில் கார் நிறுவனங்களுக்கும் தானியக்கக் கார் மென்பொருள் நிறுவனங்களுக்கும் பிரச்சினை இல்லை. ஆனால், தானியக்க வாகனங்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதில்தான் சிக்கல்.

எதிர்பார்த்ததைவிட அதற்கான செலவும் அதிகம் என்று கூறப்படுகிறது.

இவ்வாறான ஓட்டுநர் இல்லாத கார்கள், சீனாவில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin