• Thu. Apr 3rd, 2025

24×7 Live News

Apdin News

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1,900 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரோமானிய நாணயம் விற்பனை!

Byadmin

Apr 2, 2025


இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்ட்ஸ் பிராந்தியம் கிங்ஸ்வின்போர்டைச் சேர்ந்தவர் ரான் வால்டர்ஸ் (வயது 76). கடந்த ஆண்டு இவர் அங்குள்ள வால் ஹீத் நகரில் பழங்கால தங்க நாணயம் ஒன்றைக் கண்டெடுத்தார்.

பின்னர் நடைபெற்ற ஆய்வில், அது ஆலஸ் விட்டெலியஸ் என்ற மன்னர் காலத்தைச் சேர்ந்த ரோமானிய நாணயம் என்பது தெரியவந்தது.

இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ரோமானிய நாணயம் இது என்பதுடன், 1,900 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக அது காணப்பட்டது.

இதனை தற்போது வால்டர்ஸ் விற்க முடிவு செய்தார். அதன்படி, ஸ்டோர்பிரிட்ஜ் நகரில் நடைபெற்ற ஏலத்தின்போது, அந்த நாணயம் சுமார் ரூ.5 இலட்சத்துக்கு விற்பனையானது.

நாணய சேகரிப்பில் தீவிர ஆர்வம் கொண்ட ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் அதனை வாங்கியமை குறிப்பிடத்தக்கது.

By admin