இங்கிலாந்தின் லங்காஷயர் (Lancashire) கிராமத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 09.55 மணியளவில், பிரஸ்டன் சாலையில் எம்ஜி காரும் ஆடி காரும் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக Lancashire பொலிஸ் தெரிவித்துள்ளது.
விபத்தில் ஈடுபட்ட எம்ஜி காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஆடி காரை ஓட்டிய 40 வயது பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதுடன், அவர் சிகிச்சை பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், டேஷ்கேம் காட்சிகள் வைத்திருப்பவர்கள் அல்லது சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் இருந்தால் முன்வருமாறு துப்பறியும் சார்ஜென்ட் மாட் டேவிட்சன் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
The post இங்கிலாந்தில் கார் விபத்து: 19 வயது இளைஞன் உயிரிழப்பு appeared first on Vanakkam London.