• Sat. Dec 6th, 2025

24×7 Live News

Apdin News

இங்கிலாந்தில் டெலிவரி ரைடர்கள் மீதான சோதனை நடவடிக்கையில் 171 பேர் கைது

Byadmin

Dec 6, 2025


இங்கிலாந்தில் சட்டவிரோதமாகப் பணிபுரிந்த சுமார் 60 டெலிவரி ரைடர்கள் (delivery riders) குடியேற்ற நடவடிக்கைக்கு பிறகு நாடு கடத்தப்படுவார்கள் என்று உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ‘கிக்-எகானமி’ தொழிலாளர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் விளைவாக, கடந்த மாதம் மொத்தம் 171 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில், 60 பேர் பிரிட்டனில் இருந்து அகற்றப்படுவதற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில், மேற்கு மிட்லாண்ட்ஸில் உள்ள சோலிஹல்லில் உணவகத்தில் பணிபுரிந்த சீன நாட்டினர், கிழக்கு இலண்டனில் உள்ள நியூஹாமில் வசிக்கும் பங்களாதேஷ் மற்றும் இந்திய டெலிவரி ரைடர்கள், மற்றும் நோர்ஃபோக்கில் உள்ள நார்விச்சில் வசிக்கும் இந்திய டெலிவரி ரைடர்கள் ஆகியோர் அடங்குவர்.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் வருபவர்களைத் தடுக்கவும், இங்கிலாந்தில் சட்டவிரோத வேலைகளைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த மாதம், உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத், பிரிட்டனை சட்டவிரோத குடியேற்றத்திற்கு கவர்ச்சியற்றதாக மாற்றுவதற்காகவும், மக்களை நாடு கடத்துவதை எளிதாக்குவதற்காகவும் புகலிட அமைப்பில் பல சீர்திருத்தங்களை அறிவித்தார்.

எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸ் நோரிஸ், “இந்த முடிவுகள் ஒரு தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும், அதாவது, நீங்கள் இந்த நாட்டில் சட்டவிரோதமாக வேலை செய்தால், நீங்கள் கைது செய்யப்பட்டு அகற்றப்படுவீர்கள்” என்று வலியுறுத்தினார்.

டெலிவரி துறையில் உள்ள சட்டவிரோத வேலைகளை ஒழிப்பதற்காக சட்டத்தை இறுக்குவதுடன், இந்த நடவடிக்கை சட்டவிரோத குடியேற்றத்தைத் தூண்டும் சலுகைகளைக் குறைப்பதற்கும், அகற்றல்களை அதிகப்படுத்துவதற்கும் “நவீன காலத்தின் மிகவும் விரிவான மாற்றங்களின்” ஒரு பகுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்துறை அலுவலக புள்ளிவிவரங்களின்படி, செப்டம்பர் வரையிலான ஆண்டில் 8,232 சட்டவிரோத தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது முந்தைய 12 மாதங்களில் இருந்த 5,043 கைதுகளை விட 63 சதவீதம் அதிகமாகும்.

By admin