0
ஓகஸ்ட் மாதத்தில் சராசரி இங்கிலாந்து வீட்டு விலை £299,331 என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது, இது தொடர்ந்து மூன்று மாத அதிகரிப்பிற்குப் பிறகு பதிவாகியுள்ளது.
ஹாலிஃபாக்ஸ் அறிக்கையின்படி, ஓகஸ்ட் மாதத்தில் வீட்டு விலை மாதத்திற்கு 0.3% அதிகரித்துள்ளது. ஆண்டு வளர்ச்சி விகிதம் 2.2% ஆகக் குறைந்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் வீட்டுச் சந்தை ஸ்திரத்தன்மையுடன் இருந்தது, ஜனவரி முதல் விலைகள் £600க்கும் குறைவாகவே உயர்ந்துள்ளன. முதல் முறை வாங்குபவர்களுக்கான சொத்து விலைகள் மே மாதத்திலிருந்து 0.6% குறைந்து £237,577 ஆக உள்ளது.
ஆண்டு வீட்டு விலை வளர்ச்சியில் வடக்கு அயர்லாந்து 8.1% உடன் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து 4.9% ஆக உள்ளது. இலண்டன் அதிக விலை கொண்ட பகுதியாக உள்ளது, சராசரி சொத்து மதிப்பு £541,615 மற்றும் ஆண்டு வளர்ச்சி 0.8%. தென்மேற்குப் பகுதியில் கடந்த ஆண்டு சராசரியாக 0.8% வீட்டு விலைகள் குறைந்துள்ளன.