1
இங்கிலாந்தில் புற்றுநோய் மற்றும் பக்கவாத சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய மருந்துகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கீமோதெரபி சிகிச்சைக்கான மருந்துகள், இரத்த உறைவு தொடர்பான சிகிச்சை மருந்துகள் மற்றும் ஸ்கிசோஃப்ரினியா நோய்க்கான மருந்துகள் உள்ளிட்ட மொத்தம் 378 மருந்துகள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக NHS அறிவித்துள்ளது.
இந்த நிலைமையால் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மாற்று சிகிச்சை முறைகளை தேட வேண்டிய கட்டாயம் உருவாகலாம் என்றும், தேவைகள் அதிகரிப்பதால் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், NHS இங்கிலாந்தின் புதிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சுமார் 80 மருந்துகளுக்கு தற்போது உற்பத்தியாளர் இல்லாத நிலை காணப்படுவதாகவும், தற்போதைய கையிருப்பு முடிந்தால் அவை கடுமையான பற்றாக்குறையை சந்திக்கும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக கட்டண உயர்வு தொடர்பான அச்சுறுத்தல்களும் இந்த மருந்து பற்றாக்குறைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.