• Sat. Feb 28th, 2026

24×7 Live News

Apdin News

இங்கிலாந்தில் மெய்வெளி நடத்தும் ‘தமிழ் நாடக விழா 2026’ நாளை!

Byadmin

Feb 28, 2026


இங்கிலாந்தில் இயங்கி வரும் மெய்வெளி தமிழ் அரங்க இயக்கம் ஏற்பாடு செய்யும் ‘தமிழ் நாடக விழா 2026’ நாளை ஞாயிற்றுக்கிழமை (01) மாலை 5.30 மணிக்கு Watersmeet Theatre, Rickmansworth அரங்கில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

இந்த சிறப்பான நாடக விழாவில் நான்கு நாடகங்கள் அரங்கேறுகின்றன. இதில் நாற்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். சமூக விழிப்புணர்வு, மனித உறவுகள், சமகால சிந்தனைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த கதைக்களங்களுடன் இந்த நாடகங்கள் மேடையேறவுள்ளன.

இந்த விழாவின் முக்கிய நாடகமாக “சுயம் திறக்கும் பெருவெளி – மெளனச் சத்தம்” அரங்கேறுகிறது. சமூகத்தில் ஒதுக்கப்பட்ட குரல்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த நாடகம் அமைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு வணக்கம் இலண்டன் ஊடக அனுசரணை வழங்குகின்றது.

இங்கிலாந்தில் வாழும் தமிழ் மக்களின் கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த நாடக விழா அமைந்துள்ளது. குடும்பத்துடன் வந்து இரசிக்கக்கூடிய வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் முன்பதிவு:

https://www.tickettailor.com/events/meivelibritishtamiltheatre/2065235

நிகழ்ச்சி விவரம்:

📅 திகதி : 01 மார்ச் 2026 – ஞாயிற்றுக்கிழமை
🕠 நேரம்: மாலை 5.30 மணி
📍 இடம்: Watersmeet Theatre, High Street, Rickmansworth, WD3 1EH

தமிழ் நாடகக் கலையை நேசிக்கும் அனைவரும் தவறாமல் பங்கேற்று, இந்த மாபெரும் கலைவிழாவை வெற்றியடையச் செய்யுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

வணக்கம் இலண்டன்

By admin