• Sun. Oct 5th, 2025

24×7 Live News

Apdin News

இங்கிலாந்தில் ‘buy one, get one free’ சலுகை கொடுப்பதில் கட்டுப்பாடுகள்!

Byadmin

Oct 5, 2025


இங்கிலாந்தில் பெரியவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் உடல் பருமன் கொண்டவர்களாக உள்ளனர். அத்துடன், தொடக்கப்பள்ளி மாணவர்களில் 20 சதவீதமானோர் பருமனாக உள்ளனர்.

இந்நிலையில், பிள்ளைகளிடையே உடற்பருமனைக் கட்டுப்படுத்த இங்கிலாந்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, “ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம்” (buy one, get one free) போன்ற சலுகைகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதாவது, இங்கிலாந்தில் உள்ள பெரிய கடைகளிலும் சுப்பர் மார்க்கெட்டிலும் அத்தகைய சலுகைகளில் ஆரோக்கியமற்ற உணவுகள் கொடுக்கக்கூடாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆரோக்கியமற்ற உணவுகளுக்கான விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. இரவு 9 மணிக்கு முன் தொலைக்காட்சியில் அத்தகைய உணவுகளுக்கு விளம்பரங்கள் இடம்பெறக்கூடாது. மேலும், ஆரோக்கியமற்ற உணவுகளை இணையத்தில் விளம்பரப்படுத்தவும் தடை விதிக்கப்படும்.

இவை எதிர்வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடப்புக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய கட்டுப்பாடுகளால் கடைக்காரர்கள் ஆரோக்கியமான உணவுகளை விளம்பரம் செய்ய முயற்சி எடுப்பார்கள் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

By admin