0
இங்கிலாந்தில் ZipCar செயல்பாடுகள் இவ்வாண்டுடன் முடிவுக்கு கொண்டுவரப்படுகிறது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ZipCar வாடகை சேவைகள் நிறுவனம் தனது செயல்பாடுகளை இங்கிலாந்தில் நிறுத்த திட்டம் முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் ZipCar சேவைகள் ஆலோசனை நடத்த தொடங்கியுள்ளது.
அதன்படி, இம்மாதம் 31ஆம் திகதிக்கு பிறகு புதிய முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ZipCar சேவைகள் திட்டமிட்டுள்ளது.
கடந்த 2024ஆ் ஆண்டு அறிக்கையின் படி ZipCarஇன் இங்கிலாந்து கிளையில் 71 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
எதிர்வரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வரை இங்கிலாந்து பயனாளர்கள் ZipCar சேவைகளை பயன்படுத்த முடியும் என்று உறுதியளித்துள்ளது.