• Fri. Jan 30th, 2026

24×7 Live News

Apdin News

இங்கிலாந்துக்கு ஆபத்து பிரதமரின் சீன விஜயத்தைத் தொடர்ந்து ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

Byadmin

Jan 30, 2026


இங்கிலாந்து மற்றும் சீனாவுக்கிடையில் இடம்பெற்ற ஆக்கப்பூர்வமான உயர்மட்ட சந்திப்புகளைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இங்கிலாந்தை கடுமையாக எச்சரித்துள்ளார். போட்டி வல்லரசான சீனாவுடன் இங்கிலாந்து நெருக்கமான உறவுகளைத் தொடர்வது “மிகவும் ஆபத்தானது” என அவர் தெரிவித்துள்ளார்.

08 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்ஜிங்கிற்கு பயணம் செய்த முதல் இங்கிலாந்து பிரதமராக கீர் ஸ்டார்மர் திகழ்கிறார். இந்த விஜயத்தின் போது, விசா நடைமுறைகள் முதல் மேம்பட்ட சந்தை அணுகல் வரை உள்ளடக்கிய, சுமார் 13 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி – இங்கிலாந்து – சீனா உறவில் புதிய திருப்பம்: உலகின் கவனத்தை ஈர்த்த சந்திப்பு!

எனினும், வொஷிங்டனுடன் பொருளாதார மறுசீரமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஸ்டாமர் மேற்கொண்ட முயற்சிகள் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதியின் கணிக்க முடியாத அரசியல் அணுகுமுறையும், சீனாவுக்கு எதிரான நீண்டகால விரோதப் போக்கும், இங்கிலாந்துக்கு எதிர்காலத்தில் பாரிய அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை உருவாக்கக்கூடும் என அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்கிடையில், இந்த சீன விஜயம் மற்றும் அதனூடாக இங்கிலாந்து முன்னெடுக்கவுள்ள நோக்கங்கள் குறித்து அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருந்ததாக, அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

By admin