• Sat. Mar 7th, 2026

24×7 Live News

Apdin News

இங்கிலாந்துக்கு எதிராக அக்‌ஷர் பட்டேல் பிடித்த கேட்ச்கள் கபில் தேவ், சூர்யகுமாரை கண்முன் நிறுத்தியது எப்படி?

Byadmin

Mar 6, 2026


ஒரே போட்டியில் கபில் தேவ், சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் கேட்ச்களை நினைவூட்டிய அக்‌ஷர் பட்டேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2024 இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் & 2026 அரையிறுதியில் அதேபோன்ற முயற்சியில் ஈடுபட்ட அக்‌ஷர் பட்டேல்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

‘கேட்சஸ் வின் மேட்சஸ்’ (Catches win matches) என்பது கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் பிரபலமான சொல்லாடல்.

ஒரு கேட்சைப் பிடிப்பதும் தவறவிடுவதும் போட்டியின் முடிவையே மாற்றும் என்பதை உணர்த்துவதற்காக அதைச் சொல்வார்கள்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டி இந்தக் கூற்று உண்மைதான் என்பதை உணர்த்தியது.

சஞ்சு சாம்சன் 15 ரன்கள் எடுத்திருந்தபோது கொடுத்த கேட்ச் வாய்ப்பை, இங்கிலாந்து கேப்டன் ஹேரி ப்ரூக் தவறவிட்டார். அதன்பிறகு சாம்சன் 89 ரன்கள் எடுத்தார். அது இந்திய அணி மிகப் பெரிய ஸ்கோரை எடுப்பதற்குக் காரணமாக அமைந்தது.

அதேசமயம், இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது, அக்‌ஷர் பட்டேல் தன்னுடைய அபார ஃபீல்டிங் திறமையால் இரண்டு விக்கெட்டுகள் வீழ்வதற்குக் காரணமாக அமைந்தார். அதுவும் ஹேரி ப்ரூக் மற்றும் வில் ஜேக்ஸின் விக்கெட்டுகள்.

By admin