0
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப உடன்பாட்டை, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியன செய்யவிருக்கின்றன.
இந்த ஒப்பந்தம் பல பில்லியன் டொலர் மதிப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16) இங்கிலாந்திற்கு பயணிக்கவுள்ளார்.
மூன்று நாள்களுக்கு அவர் இங்கிலாந்தில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் இங்கிலாந்திற்கு மேற்கொள்ளும் இரண்டாவது உத்தியோகபூர்வ பயணமாக அது அமையவுள்ளது.
இருநாடுகளும் அவற்றின் டிரில்லியன் டொலர் தொழில்நுட்பத் துறைகளின் வழி நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் வாய்ப்புகளை அதிகப்படுத்த முனைகின்றன.
இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து இரண்டு நாடுகளும் செயற்கைத் தொழில்நுட்பத்துறையில் தங்களது செயல்திட்டங்களை வெளியிட்டுள்ளன.