0
100 ஆண்டு கால கூட்டாண்மை ஒப்பந்தத்தின் பல்வேறு கூறுகள் வரும் வாரங்களில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து மற்றும் உக்ரைன் இடையில் 100 ஆண்டு கால கூட்டாண்மை உடன்படிக்கை நேற்று வியாழக்கிழமை (16) கையெழுத்தாகியுள்ளது.
2022 முதல் ரஷ்யாவுடன் போர் செய்து வரும் உக்ரைனின் பிரதான கோரிக்கை, நேட்டோ நாடுகளுடன் இணைவதே.
இந்நிலையில், இங்கிலாந்துடன் உக்ரைன் செய்துள்ள உடன்படிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி : 100 ஆண்டு கால ஒப்பந்தம்; உக்ரைன் பயணித்துள்ள இங்கிலாந்து பிரதமர்
இந்த 100 ஆண்டு கால கூட்டாண்மை ஒப்பந்தத்தின் கீழ், லண்டனும் கீவ்-வும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று ஸ்டார்மர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
உக்ரைன் எதிர்காலத்தில் நேட்டோ நாடாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதியான பதவியேற்கும் டிரம்ப், உக்ரைனில் மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.