• Sat. Dec 21st, 2024

24×7 Live News

Apdin News

இங்கிலாந்து மன்னருக்கு இந்திய பிரதமர் மோடி கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்து

Byadmin

Dec 20, 2024


இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாடினார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளை இதன்போது இருவரும் நினைவுகூர்ந்தனர்.

அத்துடன், இந்தியா, இங்கிலாந்து இடையேயான விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் அவர்கள் உறுதி செய்தனர்.

பொதுநலவாய நாடுகள், சமோவாவில் சமீபத்தில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டம் ஆகியவை குறித்து அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

மேலும், பருவநிலை நடவடிக்கை, நிலைத்தன்மை உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள பல அம்சங்கள் குறித்தும் விவாதித்தனர். இவற்றில் மன்னரின் நீடித்த ஆதரவு மற்றும் முன்முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், இந்தியா மேற்கொண்டுள்ள பல்வேறு முன்முயற்சிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இதன்போது, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை வாழ்த்துகளை பரஸ்பரம் இருவரும் பரிமாறிக் கொண்டதுடன், மன்னரின் சிறந்த ஆரோக்கியம், நல்வாழ்வுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

By admin