0
இங்கிலாந்தில் பாரடைஸ் பார்க் (Paradise Park) விலங்கியல் தோட்டத்திலிருந்து தப்பிய செந்நாரை ஒன்று, பிரான்ஸில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4 மாதங்கள் நிரம்பிய ஃப்ரெங்கி (Frankie) என்ற இந்த செந்நாரை, இம்மாதம் 2ஆம் திகதி விலங்கியல் தோட்டத்திலிருந்து தப்பி, பிரான்ஸை சென்றடைந்துள்ளது.
அது பறக்காமல் இருக்க அதனுடைய இறக்கைகள் வெட்டப்பட்டிருந்தன. அதையும் மீறி ஃப்ரெங்கி தப்பியது என்று த கார்டியன் (The Guardian) தகவல் வெளியிட்டுள்ளது.
பிரான்ஸில் பிரிட்டனி (Brittany) எனும் பகுதியில் அது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிலாந்திலிருந்து அந்த இடம் சுமார் 160 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்நிலையில், ஃப்ரெங்கி விரும்பிய சுதந்திரத்தை அதற்கே கொடுத்துவிட விலங்கியல் தோட்டம் முடிவெடுத்துள்ளது. அதை மீண்டும் தோட்டத்திற்குக் கொண்டுவரப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதைப் பிடிப்பது ஆபத்து என்று கூறப்பட்டது. காரணம், ஃப்ரெங்கி மற்ற பறவைகளுடன் பழகியிருக்கலாம் என்றும் அதனால் அதற்குப் பறவைக் காய்ச்சல் இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.