• Sat. Oct 17th, 2026

24×7 Live News

Apdin News

இசையமைப்பாளர் தேவா உடனான அனுபவங்களைப் பகிரும் பிரபலங்கள்

Byadmin

Oct 17, 2026


இசையமைப்பாளர் தேவா உடனான அனுபவங்களைப் பகிரும் பிரபலங்கள்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

‘தேனிசைத் தென்றல்’ என ரசிகர்களால் அழைக்கப்பட்ட இசையமைப்பாளர் தேவா இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சமீப காலத்தில் இசை நிகழ்ச்சிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்த தேவா திரைப்படப் பாடல்களையும் அவ்வப்போது பாடி வந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினரும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் தேவா உடனான அனுபவங்களைப் பகிரும் பிரபலங்கள்

படக்குறிப்பு, புஷ்பவனம் குப்புசாமி

தேவா உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பாடகரும் தமிழ்நாடு அரசின் கலைப் பண்பாட்டு துறையின் இயல் இசை நாடக மன்றத் தலைவருமான புஷ்பவனம் குப்புசாமி, அவரின் மறைவு ரசிகர்களுக்கும் திரை உலகுக்கும் மிகப்பெரிய இழப்பு என்று தெரிவித்தார்.

“எனக்கும் அவருக்குமான பழக்கம் திரை உலகில் அறிமுகம் ஆவதற்கு முன்பிருந்தே உள்ளது. சினிமாவுக்கு வரும் முன்பாக மேல் மருத்துவத்தூரில் அவரது இசையில் பக்திப் பாடல்களைப் பாடியுள்ளேன்,” என்று கூறினார் புஷ்பவனம் குப்புசாமி.

சினிமாவுக்கு வந்த பிறகு இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணித்ததாகக் கூறிய அவர், “அவருடைய இசையில் சினிமா பாடல் பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. சென்னையின் ஒரு பகுதியில் இருந்த கானா பாடல்களை உலக மேடைக்கு அழைத்துச் சென்ற பெருமை அவரையே சேரும். பல்வேறு சிரமங்களைக் கடந்து சினிமாவுக்குள் நுழைந்தார். கடின உழைப்பால் தனக்கான இடத்தைப் பிடித்து அதைத் தக்கவைத்தும் கொண்டார். எளிமையான, கனிவான மனிதர். சினிமாவில் எவ்வளவு உயரத்தை அடைந்தாலும் அந்த குணத்தை அவர் எப்போதும் மாற்றிக் கொண்டது இல்லை” என்றார்.

By admin