0
உலக பொதுமறை என அனைவராலும் போற்றிப் புகழப்படும் திருக்குறளுக்கு இசையமைத்த திரைப்பட இசையமைப்பாளர் பரத்வாஜிற்கு கனடாவில் உள்ள றொரான்ரோ தமிழ் சங்கம் ‘குறள் இசையோன்’ எனும் பட்டத்தை வழங்கி கௌரவித்திருக்கிறது.
‘ஒவ்வொரு பூக்களுமே’ என்ற எவர்கிரீன் ஹிட் பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பரத்வாஜ், பத்து ஆண்டுகளுக்கு முன்னரே உலக பொதுமறையான திருக்குறளில் இடம்பெறும் 1330 திருக்குறளுக்கும் பாடகர்களை பாட வைத்து, இசை அமைத்து, திருக்குறள் முழுவதையும் இசை வடிவில் உருவாக்கினார்.
இந்த தருணத்தில் கனடா நாட்டில் உள்ள ரொறன்ரோ தமிழ் சங்கத்தில் நடைபெற்ற உலக திருக்குறள் மாநாட்டில் இசையமைப்பாளர் பரத்வாஜ் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார். இவருக்கு தமிழ்ச்சங்கம்- ‘குறள் இசையோன்’ எனும் பட்டத்தை வழங்கி கௌரவித்தது.
இந் நிகழ்வில் பரத்வாஜ் இசையமைத்த திருக்குறளை பரத்வாஜ் மற்றும் அவரது வாரிசான ஜனனி பரத்வாஜ் மற்றும் பாடகர்களும், பாடகிகளும் பாடினர்.
இந்நிகழ்வில் இசையமைப்பாளர் பரத்வாஜ் பேசுகையில், ” மூன்றாண்டுகளுக்கு மேல் 1330 பாடகர் – பாடகிகளை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திருக்குறளிசைக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் விழா எடுத்து, எம்மை கௌரவித்தது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.