• Sun. Oct 27th, 2024

24×7 Live News

Apdin News

இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ‘பாய் பெஸ்டீ இல்லா சிங்கமே..’

Byadmin

Oct 27, 2024


அறிமுக நாயகன் ஹரி பாஸ்கர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பாய் பெஸ்டீ இல்லா சிங்கமே’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோ மற்றும் காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ எனும் திரைப்படத்தில் ஹரி பாஸ்கர் ,  லொஸ்லியா, இளவரசு, ஷா ரா, ரயான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆர். குலோத்துங்கவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஓஷோ வெங்கட் இசையமைத்திருக்கிறார்.

திருமணத்திற்கு முந்தைய உடல் உறவு தொடர்பான விடயத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை இன்வேடு மீடியா மற்றும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் என். ராமசாமி மற்றும் நிதின் மனோகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘பாய் பெஸ்டீ இல்லா சிங்கமே’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோ மற்றும் காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் ரிதுன் சாகர் எழுத, பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான ஓஷோ வெங்கட் பாடியிருக்கிறார்.

பாடலின் வரிகள் இன்றைய நவீன இளைய தலைமுறையினரின் வாழ்வியல் சம்பவங்களை மையப்படுத்தி இருப்பதால் இணைய தலைமுறை ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

By admin