• Wed. Jan 28th, 2026

24×7 Live News

Apdin News

இஞ்சியின் முழு பலன்களை பெற அதை நம் உணவில் எவ்வாறு சேர்க்க வேண்டும்?

Byadmin

Jan 28, 2026


குமட்டல், அழற்சி, தசை வலிக்கு மருந்தாகும் இஞ்சியின் நன்மைகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

கர்ப்பம், பதற்றம், வயிற்றுப் புழு தொற்றுகள், பயணத்தின்போது ஏற்படும் வாந்தி எனப் பல விஷயங்கள் அவ்வப்போது நமக்கு பிரச்னை தரலாம்.

ஆனால், உணவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சில பொருட்கள் அவற்றைச் சரிசெய்ய உதவுமா? அவற்றுக்கு வேறு ஏதேனும் ஆரோக்கியம் தொடர்பான பலன்கள் உண்டா?

அப்படிப்பட்ட ஒரு பொருள்தான் இஞ்சி. இது குமட்டல் உள்படப் பல நோய்களை எதிர்த்துப் போராடும் ஒரு காரமான பொருளாக உள்ளது. இது உண்மையிலேயே உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

இதன் பின்னுள்ள அறிவியல் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பல ஆய்வுகள் இஞ்சி பலருக்கு குமட்டல் அறிகுறிகளைக் குறைப்பதாக கூறுகின்றன. பிரிட்டன் தேசிய சுகாதார சேவையும் குமட்டலுக்கு இஞ்சி கலந்த தேநீரைக் குடிக்குமாறு பரிந்துரைக்கிறது. ஆனால் இஞ்சி எப்படி இதைச் செய்கிறது?

“இதற்குக் காரணம் அதன் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்புப் பண்புகள்தான். இது செரிமான மண்டலத்தில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது. அதன் மூலம் அசௌகரியத்தை போக்கி, வயிற்று உபாதைகளைச் சரிசெய்கிறது” என்று உணவியல் நிபுணரும் பிரிட்டிஷ் உணவியல் சங்கத்தின் செய்தித் தொடர்பாளருமான ஆன்னா டேனியல்ஸ் விளக்குகிறார்.

By admin