• Mon. Mar 30th, 2026

24×7 Live News

Apdin News

‘இடிபாடுகளுக்கு அடியில் என் மகள் சிக்கியிருக்கிறாள்’ – இரானில் ஒரு தாயின் கண்ணீர்

Byadmin

Mar 30, 2026


காணொளிக் குறிப்பு, ‘இடிபாடுகளுக்கு அடியில் என் மகள்’ – தெஹ்ரானில் தாயின் வேதனை

காணொளி: ‘இடிபாடுகளுக்கு அடியில் என் மகள் இருக்கிறாள்’ – இரானில் ஒரு தாயின் கண்ணீர்

தெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் உள்ள ரெசலாத் என்ற குடியிருப்புப் பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிக்குள் இருந்த ஒரு கட்டடத்தில் வசித்து வந்தார் அலி. இது அவருடைய உண்மையான பெயர் அல்ல.

தாங்கள் “இரானிய பசிஜின் ராணுவ வளாகத்தை” குறிவைத்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) கூறியது. பசிஜ் ஆயுதக் குழுவானது இரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் ஒரு பகுதியாகும்.

பிபிசி ஐ முடிந்தவரை காட்சி ஆதாரங்களைச் சேகரித்தது, மேலும் செயற்கைக்கோள் படங்களையும் பகுப்பாய்வு செய்துள்ளது. இந்தக் கட்டடம் பசிஜ் அமைப்பினரால் பயன்படுத்தப்பட்டது என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.

ஆனால் அன்றைய தினம், அடுத்தடுத்து மூன்று குடியிருப்புக் கட்டடங்களும் தாக்கப்பட்டன. 2,000 பவுண்டுகள் எடை கொண்ட மார்க் 80 வழிகாட்டப்பட்ட குண்டு போன்ற ஒரு ஆயுதத்தால் இது தாக்கப்பட்டிருக்கலாம் என்று ராணுவ வல்லுநர்கள் எங்களிடம் தெரிவித்தனர். இத்தாக்குதலில் 60 மீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருந்த வீடுகளும் வணிக நிறுவனங்களும் கடுமையாக சேதமடைந்தன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin