• Sat. Mar 28th, 2026

24×7 Live News

Apdin News

“இட்லிக்கு பதில் பிரட்” – எல்பிஜி பிரச்னை மருத்துவமனைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன?

Byadmin

Mar 28, 2026


சிலிண்டர் தட்டுப்பாடு, இட்லி, மத்திய கிழக்கு, சென்னை அரசு மருத்துவமனை

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலின் பாதிப்பு, சென்னை அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவில் எதிரொலிக்கிறது.

“சிலிண்டர் தட்டுப்பாடால் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இட்லி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக அதனை ஈடு செய்யும் ஊட்டச்சத்துக்கள் கொண்ட வேறு உணவு வகைகள் வழங்கப்படுகின்றன” என்கிறார் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் உணவியல் நிபுணர் மருத்துவர் கலாராணி.

அரசு மருத்துவமனைகள் எரிவாயு தட்டுப்பாட்டை “சந்திக்கவில்லை” என கூறும் நிலையிலும், மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

இட்லிக்கு மாற்றாக ரொட்டி

சிலிண்டர் தட்டுப்பாடு, இட்லி, மத்திய கிழக்கு, சென்னை அரசு மருத்துவமனை

பட மூலாதாரம், Getty Images

அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு காலை உணவுகளில் பெரும்பாலும் இட்லி, சாம்பார் ஆகியவை ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

“தமிழ்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்பு நோயாளிகளுக்கு காலை உணவாக இட்லி, பொங்கல், சாம்பார் போன்றவை வழங்கப்படும். ஆனால் தற்போது ரொட்டி (Bread), சென்னா மசாலா போன்றவை வழங்கப்படுகிறது” என்று கூறுகிறார் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் உணவியல் நிபுணர் மருத்துவர் கலாராணி.

By admin