ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருவம் கைகோர்த்து, சிரித்துக் கதைத்துக்கொண்டு நடந்து செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
ஷங்ஹாய் மாநாட்டில் ஒன்றுகூடிய இவர்கள் சீன ஜனாதிபதி சி சின்பிங்கைச் சந்தித்துப் பேசுவதை குறித்த வீடியே காட்டுகிறது.
இந்தச் சந்திப்பின்மூலம், இந்தியாவுக்குச் சக்திவாய்ந்த நண்பர்கள் இருப்பதை மோடி வலியுறுத்திக் காட்ட விரும்புவதாக இணையவாசிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
அதேவேளை, புட்டினைக் கட்டி அணைத்துக்கொள்வதைக் காட்டும் படத்தையும் மோடி பகிர்ந்துள்ளார்.
இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள வேளையில் இந்தச் சந்திப்பு உலகளவில் கவனிக்கப்படுகிறது.
கடந்த 7 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் மோடி சீனாவுக்குச் சென்றுள்ளார். சீனாவில் நடைபெற்ற ஷங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் மோடி உட்பட 20 உலகத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
The post இணையத்தில் கவனத்தை ஈர்த்த புட்டின் – மோடி நெருக்கம்! appeared first on Vanakkam London.