5
இலண்டன் டியூப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட குறுஞ்செய்தி (SMS) மோசடி தொடர்பாக நால்வர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்களில் மூவர் சிறைத்தண்டனை பெற்றுள்ளனர்; ஒருவர் ஒத்திவைக்கப்பட்ட தண்டனை பெற்றுள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மோசடி குழு, சூட்கேஸ்களில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட “SMS blasters” சாதனங்களை பயன்படுத்தி, நிலக்கீழ் ரயில் நிலையங்களில் இருந்து போலியான பார்சல் டெலிவரி குறுஞ்செய்திகளை அனுப்பியது.
அந்தச் செய்திகளில் உள்ள இணைப்புகள் மூலம் பயணிகளின் வங்கி விவரங்களைப் பெறுவது இவர்களின் நோக்கமாக இருந்தது. “அவர்களின் வங்கி கணக்குகளை காலி செய்வதே குறிக்கோள்” என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் “முக்கிய தலைவன்” என குறிப்பிடப்பட்ட 48 வயதான Zhijia Fan தனிப்பட்ட முறையில் £100,000-க்கு மேல் இலாபம் பெற்றதாக குற்றப்புலனாய்வாளர் அலெக்ஸ் டேவிட்சன் தெரிவித்தார்.
மற்ற குற்றவாளிகளான 20 வயதான Daoyan Shang, 41 வயதான Wan Hafiz மற்றும் 25 வயதான Gatis Lauks குறைவான தொகை பெற்றிருக்கலாம் என கூறப்பட்டது.
அதேவேளை, லாக்ஸ் திருடப்பட்ட வங்கி விவரங்களை பயன்படுத்தி கிப்ட் கார்டுகள் வாங்குவதன் மூலம் சுமார் £600,000 பணத்தை பணமோசடி செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
லாக்ஸ் வாங்கிய கிப்ட் கார்டுகளுக்காக 5% கமிஷன் பெற்றதாகவும், இந்த திட்டத்தின் மூலம் தனிப்பட்ட முறையில் சுமார் £30,000 சம்பாதித்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. 2025 மே மாதத்தில் பொலிஸாரிடம் “no comment” பதில் அளித்த அவர், ஐந்து நாட்களுக்கு பிறகு தனது பங்கினை ஒப்புக்கொண்டார்.
இந்தக் குழு திருடப்பட்ட வங்கி தகவல்களைப் பயன்படுத்தி ஆடைகள், பொருட்கள் மற்றும் வீடியோ கேம்கள் உள்ளிட்ட பல பொருட்களை வாங்கியதாக கூறப்பட்டது.
2025 மார்ச் 11 அன்று, இங்கிலாந்து போக்குவரத்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியதுடன், அன்றைய தினம் பணிநேரத்திற்கு வெளியே இருந்த ஒரு அதிகாரி, துளைகள் மற்றும் பச்சை ஒளி வெளிவந்த நிலையில் காணப்பட்ட சூட்கேஸுடன் இருந்த நபரை கவனித்தார்.
பின்னர் மேற்கொண்ட சோதனைகளில் 10,832 கிப்ட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் £80,000-க்கு மேற்பட்ட மோசடி லாபம் ஏற்றப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
Fan மற்றும் Shang முன்னதாக விசாரணையை எதிர்கொண்டபோது, 2025 ஜனவரி முதல் மார்ச் வரை மோசடி சதி குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.