வானம் பிளந்து பெரு மழையைத் தந்தாலும்
எங்கள் கண்கள் கரைந்து வழியும் விழி நீர் அதை விடப் பெரிது
சூரியன் முழுதாய் சுட்டெரித்து தோன்றினாலும்
எங்கள் சுடர்கள் தரும் கோபத்து வெப்பம் அதை விடப் பெரிது
ஆயிரம் ராஜ சிறகுடன் பறவைகள் பறப்பினும் வானம் நெடுக பறந்துருகும்
எங்கள் சிவப்பு மஞ்சள்க் கொடிகள் அதை விடப் பெரிது
ஊர் கூடித் தேரிழுக்கும் கோயில் முன்றல் சனக் கடலானாலும்
உலகே கூடித் தேரிழுக்கும் எங்கள் துயிலுமில்லங்கள் அதைவிடப் பெரிது
ஓய்விலா ஓல மிடும் நந்திக்கடல் ஓசை செவிகளைக் கிழிக்கினும் ஓ என்று அழுதெழுது நெஞ்சைக் கிழிக்கும்
எங்கள் அன்னையர் அழுகை அதை விடப் பெரிது
வழி நெடுக நீவிர் நிப்பீர்
எக்கணமும் புன்னகை பூப்பீர்
ராப் பகலாய் எல்லை காப்பீர்
யாமறியோம் காற்றாய் கலப்பீர்
மரங்கள் உம் கதை பேசும்
பறவைகள் உம் சிறகு விரிக்கும்
அலைகள் உம் பெய ருரைக்கும்
ஆரோ உமக்காய் அழுது முடிப்பார்
மண்ணில் உந்தன் பெயரிருக்கும்
பூவில் உந்தன் புரட்சி பூக்கும்
காற்றில் உந்தன் கனவு ஜனிக்கும்
கானம் உன்னைச் சுமந்து வரும்
கர்த்திகை இப்படித்தான்
கதைகள் சொல்லும்
யாரோ ஒரு தமிழிச்சி கருவில்
புதிதாய் ஒரு குழந்தை படிக்கும்
பிறிதொரு நாளில்
கரிகாலன் உதிக்கும்
இதனை இக் கார்த்திகை செய்யும்
தா. செல்வா
The post இதனை இக்கார்த்திகை செய்யும் | தா. செல்வா appeared first on Vanakkam London.