• Fri. Apr 10th, 2026

24×7 Live News

Apdin News

இதய செயலிழப்பை 5 வருடங்களுக்கு முன்பே கண்டிபிடிக்கும் AI.. மருத்துவ உலகில் ஒர் புரட்சி!

Byadmin

Apr 10, 2026


எப்படி செயல்படுகிறது?

இதய தசைகள் பலவீனமடையும் போது, அதைச் சுற்றியுள்ள கொழுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் CT ஸ்கேனில் கூட புலப்படாது.

ஆனால் இந்த AI கருவி இதயத்தைச் சுற்றியுள்ள கொழுப்பு அடுக்குகளில் ஏற்படும் சிறு மாற்றங்களையும் நுணுக்கமாக கண்காணித்து, நோயாளிக்கு இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் எவ்வளவு உள்ளது என கணக்கிட்டு Risk Score வழங்குகிறது.

இந்த ஏஐ மென்பொருளை மருத்துவமனைகளில் எடுக்கப்படும் CT ஸ்கேன்களுடன் இணைத்தால் போதுமானது.

இங்கிலாந்தின் 9 மருத்துவமனைகளில் சுமார் 72,000 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த கருவி 86% துல்லியமாக முடிவுகளை வழங்கியுள்ளது.

ஏஐ கருவி வழங்கும் Risk Score-ல் ‘அதிக ஆபத்து’ பிரிவில் வகைப்படுத்தப்பட்டவர்களுக்கு, அடுத்த 5 ஆண்டுகளில் இதயம் செயலிழக்கும் வாய்ப்பு மற்றவர்களை விட 20 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

By admin