• Fri. Nov 21st, 2025

24×7 Live News

Apdin News

‘இதற்கு அவர்கள் என்னை கொன்றிருக்கலாம்’- எத்தியோப்பியாவில் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள்

Byadmin

Nov 21, 2025


காணொளிக் குறிப்பு, ‘இதற்கு அவர்கள் என்னை கொன்றிருக்கலாம்’- எத்தியோப்பியாவில் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள்

‘இதற்கு அவர்கள் என்னை கொன்றிருக்கலாம்’- எத்தியோப்பியாவில் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள்

எச்சரிக்கை: இதில் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்முறை பற்றிய விளக்கங்கள் உள்ளன.

2023இல், வடக்கு எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் ஆயுத மோதல் வெடித்தது. ஃபானோ என்ற உள்ளூர் போராளிக் குழு அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியது.

கொலைகள், கைதுகள், கொள்ளைகள், பாலியல் வன்முறை உள்பட கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இரு தரப்பினரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

பிபிசி தொகுத்த தரவுகளின்படி, கடந்த 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 2,700 பாலியல் வன்கொடுமைகள் பதிவாகியுள்ளன.

இது வெறும் 43 சுகாதார நிலையங்கள், மருத்துவர்களின் நேர்காணல்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டது.

சர்வதேச சட்டத்தின் கீழ், ஆயுத மோதலில் பாலியல் வன்கொடுமை ஒரு போர்க்குற்றமாகும்.

பிபிசி இந்தக் குற்றச்சாட்டுகளை எத்தியோப்பிய பாதுகாப்பு அமைச்சகத்திடம் தெரிவித்தது. ஆனால் அது பதிலளிக்கவில்லை.

பிபிசியிடம் பேசிய ஃபானோ தலைவர் ஒருவர், ‘இதில் தங்கள் குழுவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை, ஃபானோ கடுமையான ஒழுக்க விதிகளைப் பேணுகிறது’ என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin