• Sun. Mar 22nd, 2026

24×7 Live News

Apdin News

இது நாங்கள் ஏற்கனவே கூறியதுதான்: நிதிஷ்குமார் பற்றி பிரசாந்த் கிஷோர்

Byadmin

Mar 22, 2026


பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் அந்தப் பதவியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். அவர் மாநிலங்களவைக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

நிதிஷ்குமாரின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மக்கள் தீர்ப்புக்கு நிதிஷ்குமார் துரோகம் இழைத்துவிட்டார் என கண்டித்தன.

இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சி நிறுவனரான பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

அவர் (நிதிஷ்குமார்) உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தகுதியுடன் இல்லாதபோது ​​எவ்வளவு காலம் முதல் மந்திரி பதவியில் நீடிப்பார்? இதை நாங்கள் முன்பிருந்தே கூறி வருகிறோம். இப்போது அது வெளிப்படையாகத் தெரிகிறது என தெரிவித்தார்.

By admin