• Wed. Apr 30th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியரை மணந்த பாகிஸ்தான் பெண் சந்திக்கும் சவால்- கர்ப்பிணி மருமகளை பிரிய மறுக்கும் குடும்பம்

Byadmin

Apr 29, 2025


பஹல்காம், காஷ்மீர், பஞ்சாப், இந்தியாவின் மருமகள் , எல்லை கட்டுப்பாட்டுக் கோடு, மக்கள் வெளியேற்றம்

பட மூலாதாரம், Gurpreet Singh Chawla/BBC

படக்குறிப்பு, விசாவுக்காக 6 வருடம் காத்திருந்து மணம் புரிந்த சோனுவும் மரியாவும்

  • எழுதியவர், குர்ப்ரீத் சிங் சாவ்லா
  • பதவி,

“நான் வேலையில் இருக்கும்போது எனக்கு அழைப்பு வந்தது. வீட்டுக்குப் போனால் எல்லாரும் அழுது கொண்டிருக்கிறார்கள். எங்கள் வீட்டுக்குக் காவல்துறையினர் வந்திருந்தனர். அவர்கள் மரியாவை அவளது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு உடனடியாகச் செல்லும்படி கூறினர். நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று எனக்குப் புரியவில்லை”.

குர்தாஸ்பூர்வாசியான சோனு, இந்த வார்த்தைகளைச் சொல்லும்போதே உணர்ச்சிவயப்படுவது போலத் தெரிந்தார்.

பஹல்காமின் பின்விளைவுகள் அரசியல் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூகம் மற்றும் குடும்பங்களையும் கூட பாதிக்க ஆரம்பித்துள்ளது. இதன் விளைவுகளை இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியப் பெண்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

அப்படி ஒரு விஷயம்தான் குர்தாஸ்பூரிலும் நடந்துள்ளது. குர்தாஸ்பூரின் கிராமமான சதியாலியைச் சேர்ந்த இளைஞர் சோனு மாஷி. இவர் தனது மதத்தைச் சேர்ந்த மரியா என்னும் பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா பகுதியைச் சேர்ந்த பெண்ணை 2024, ஜூலை 8 அன்று மணமுடித்தார்.

By admin