• Thu. Oct 9th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியர்களின் இருமல் மருந்து மீதான அதீத நம்பிக்கை எப்படி உயிரையே பறிக்கிறது?

Byadmin

Oct 8, 2025


ஜம்முவில் இறந்த ஒரு குழந்தையின் தந்தை கோவிந்த் ராம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஜம்முவில் ஐந்து வயதுக்குட்பட்ட 12 குழந்தைகளின் மரணத்துக்கு அவர்கள் எடுத்துக்கொண்ட இருமல் சிரப்பே காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த குழந்தைகளில் ஒருவரின் தந்தை தனது குழந்தையின் புகைப்படத்தை காட்டுகிறார்

செப்டம்பர் மாத தொடக்கத்தில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய நகரில், பல குழந்தைகள் திடீரென மரணமடைந்தனர். பதற்றமடைந்த உள்ளூர் சுகாதார ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர்.

ஒன்று முதல் ஆறு வயதுக்குள் உள்ள குறைந்தது 11 குழந்தைகள், இருமல் மருந்தை குடித்த சில நாட்களுக்குள் இறந்தனர்.

இறப்புக்கான காரணத்தை அறிய குடிநீர், கொசுக்கள் என அதிகாரிகள் பல விஷயங்களை ஆராயத் தொடங்கினர். இறுதியில், அந்தக் குழந்தைகளின் சிறுநீரகங்கள் செயலிழந்திருந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் நடந்து சில வாரங்களுக்கு பிறகு, சென்னையில் உள்ள அரசு ஆய்வகம் அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டது.

By admin