இந்தியர்களுக்கு வழங்கும் இங்கிலாந்து விசா விதிகளை தளர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டாமர் தெரிவித்தார்.
இங்கிலாந்து பிரதமர், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தார்.
அதன்போதே, பிரதமர் இந்தியர்களுக்கு வழங்கும் இங்கிலாந்து விசா விதிகளை தளர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறியதுடன், அது பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொருந்தும் என்றும் கூறினார்.
அமெரிக்கா விசா நடைமுறைகளைக் கடுமையாக்கியிருப்பதால், இங்கிலாந்து அதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால், விசா விதிகளை தளர்த்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை என இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டாமர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்தியப் பயணத்தின் மூலம் அண்மையில் உருவாக்கப்பட்ட இங்கிலாந்து – இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை நடப்புக்குக் கொண்டுவர விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவர் மும்பையில் சந்திக்கவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலிருக்கும் வர்த்தக உறவை விரிவுபடுத்துவது குறித்துத் ஸ்டாமரும் மோடியும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
பிரதமருடன் வர்த்தகத் தலைவர்கள், தலைமை நிர்வாகிகள் மற்றும் பல்கலைக்கழகத் தலைவர்கள் என 120 பேர், இந்தியாவுக்குச் சென்றுள்ளனர்.
The post இந்தியர்களுக்கான விசா விதிகளை தளர்த்தும் திட்டம் இல்லை: இங்கிலாந்து பிரதமர் திட்டவட்டம்! appeared first on Vanakkam London.