• Sun. Aug 24th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியர்கள் EB 5 விசாவை நாடுவது ஏன்? யார் யார் இந்த விசா பெற முடியும்?

Byadmin

Aug 19, 2025


H1B விசா மற்றும் அமெரிக்க குடியுரிமை வாங்குவது மிகவும் சவாலாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, H1B விசா மற்றும் அமெரிக்க குடியுரிமை வாங்குவது மிகவும் சவாலாக உள்ளது.

அமெரிக்காவிற்குச் செல்லவேண்டும் என்ற இந்தியர்களின் கனவும், அங்கேயே குடிபெயரவேண்டும் என்ற அவர்களின் ஆசையும் கடினமாகி வருகிறது. H1B விசா மற்றும் அமெரிக்க குடியுரிமை வாங்குவது மிகவும் சவாலாக உள்ளது.

டிரம்ப் அறிவித்துள்ள கோல்ட் கார்ட் (Gold Card) விசாவை வாங்குவதற்கு நீண்ட நாட்களாகும். மேலும் இதற்கு அதிகம் செலவாகும் என்பதால் இதை வாங்குவதும் கடினம்.

இதுபோன்ற சூழலில் இந்தியர்கள் EB-5 விசாவை நோக்கிப் படையெடுக்கின்றனர். சீனாவுக்குப் பிறகு EB-5 விசாவிற்காக அதிகம் பேர் விண்ணப்பித்தவர்களைக் கொண்ட நாடாக உள்ளது இந்தியா. மேலும் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.

ஆனால் இந்தியர்களுக்கு அமெரிக்காவின் EB-5 விசா மீது அதிக ஆசை ஏற்பட்டுள்ளது ஏன்? டிரம்பின் கோல்ட் விசாவில் இருந்து இது எப்படி மாறுபடுகிறது? ஏனென்றால் EB-5 விசாவிற்கு மாற்று என கோல்ட் கார்ட்டை அறிவித்தார் டிரம்ப். இதைப்பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். ஆனால், அதற்கு முன்பாக EB-5 விசா என்றால் என்ன?

By admin