• Wed. Aug 20th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவிடம் டிரம்ப் காட்டும் கண்டிப்பு ரஷ்யாவுக்கு சாதகம் என நிபுணர்கள் சொல்வது ஏன்?

Byadmin

Aug 20, 2025


விளாடிமிர் புதின் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விளாடிமிர் புதின் மற்றும் டிரம்பின் சந்திப்பை இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வந்தது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதிமுன் மிகவும் நட்புடன் ஆகஸ்ட் 15ஆம் தேதி அலாஸ்காவில் சந்தித்துக்கொண்டனர்.

புதினை சந்தித்த போது டிரம்ப் நடந்துகொண்ட விதமும், அதன் பின்னர் தெரிவித்த கருத்துகளும் யுக்ரேன் விவகாரத்தில் அவர் ரஷ்யா மீது மிகவும் கோபமாக இருக்கிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தவில்லை.

இந்தியாவும் இந்த உரையாடலின் மீது ஒரு கண்ணை வைத்திருந்தது.

இந்த சந்திப்பு சுமூகமாக நடைபெற்றால், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது டிரம்ப் விதித்த 25% கூடுதல் வரி விலக்கிக்கொள்ளப்படலாம் என சொல்லப்பட்டது.

By admin