• Mon. Feb 16th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவிடம் தோற்றாலும் பாகிஸ்தான் சுவாரஸ்ய சாதனை

Byadmin

Feb 16, 2026


டி20 உலகக்கோப்பை, இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்ற போதிலும் பாகிஸ்தான் அணி சுவாரஸ்யமான சாதனையை படைத்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையின் 27வது போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக, பாகிஸ்தான் அணி 6 சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு, உலகக் கோப்பை போட்டியில் எந்த அணியும் 6 சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியதில்லை. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியே 18 ஓவர்களை வீசியது.

வேகப்பந்து வீச்சுக்கு பெயர் பெற்ற பாகிஸ்தான் அணி, இந்தப் போட்டியில் 2 ஓவர்களை வீச மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது. அந்த 2 ஓவர்களையும் ஷாஹீன் ஷா அப்ரிடி வீசினார்.

இதற்கு முன்பு 2012-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி கொழும்பில் இதே மைதானத்தில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 18 ஓவர்கள் சுழற்பந்து வீச்சாளர்களையும், வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் இரண்டு ஓவர்கள் வீசியும் பந்து வீசியது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது, ஆனால் இந்த முறை அதுபோல் இல்லை.

By admin