• Tue. Feb 25th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவிடம் தோல்வி: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுவதென்ன?

Byadmin

Feb 25, 2025


இந்தியா, பாகிஸ்தான், சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம், Getty Images

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற இந்தியாவுடனான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சமூகவலைத்தளங்கள், பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் பாகிஸ்தான் அணி மீதான கோபம் வெளிப்பட்டு வருகிறது.

வங்கதேசத்திற்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தையும் வென்றதன் மூலம் அரையிறுதிக்கான தனது வாய்ப்பை உறுதி செய்து கொண்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அணி தேர்வு மீதான கோபம்

இந்தியா, பாகிஸ்தான், சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகமது ரிஸ்வான்

பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் நிகழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் சென்ட்ரலில் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம், “அணியில் நிறைய நடந்து விட்டது, நாம் கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக வொயிட் பால் கிரிக்கெட்டில் தோற்று வருகிறோம். எல்லா அணிகளுடனும் தோற்கிறோம். தற்போது துணிச்சலான முயற்சிகள் தேவைபடுகின்றன. தைரியமான இளம் வீரர்கள் நமக்கு தேவை. ஐந்து முதல் ஆறு மாற்றங்கள் அணியில் செய்யப்பட வேண்டும். 2026 T20 உலகக்கோப்பை தொடருக்கான முன்னேற்பாடுகள் தற்போது தொடங்கப்பட வேண்டும். அவர்களுக்கு நிறைய நேரம் கொடுத்து விட்டோம். அவர்களை நட்சத்திர வீரர்களாக்கினோம். ஆனால் இனி அது நடக்கப்போவதில்லை” என பேசினார்.

By admin