• Mon. Dec 29th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவில் அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை தனியே இனங்காண்பது எப்படி?

Byadmin

Dec 29, 2025


நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளை வகைப்படுத்தி எளிதாக அடையாளம் காண்பது எப்படி?

பட மூலாதாரம், SAMSON KIRUBAKARAN

படக்குறிப்பு, சுருட்டை விரியன்

பாம்புக்கடி சம்பவங்கள் அதிகம் நிகழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் பாம்புக்கடி நிகழ்வுகளால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மரணங்கள் நிகழ்கின்றன.

“தமிழ்நாட்டில் நிகழும் பாம்புக்கடிகளில் கிட்டத்தட்ட 95% நஞ்சற்ற பாம்புகளால்தான் நிகழ்கின்றன. மீதமுள்ள 5% சம்பவங்களில் பெரும்பாலும் கண்ணாடி விரியன், நாகம், சுருட்டை விரியன், கட்டு வரியன் ஆகிய நான்கு வகை நச்சுப் பாம்புகளே காரணமாக இருக்கின்றன,” என்று கூறுகிறார் யுனிவர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் என்.எஸ்.மனோஜ்.

“நஞ்சுள்ளவை, நஞ்சற்றவை எனப் பிரித்தறிய முடியாத காரணத்தால் பல நேரங்களில் நஞ்சற்றவை எனக் கருதி மக்கள் கவனமின்றிச் செயல்படுவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பாம்புக்கடி விபத்துகள் நிகழக் காரணமாவதாக,” கூறுகிறார் பாம்பு மீட்பு மற்றும் ஆராய்ச்சியில் கடந்த 9 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் மதுரையைச் சேர்ந்த சாம்சன் கிருபாகரன்.

இந்த நிலையில், நச்சுப் பாம்புகளை அடையாளம் காண முடிந்தால் பாம்பு-மனித எதிர்கொள்ளலின்போது ஏற்படும் அசம்பாவிதங்களை பெருமளவு தடுக்க முடியும் என்பதே நிபுணர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.

எனவே, இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பிக்4 பாம்புகள் என்று அறியப்படும், அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளைப் பார்த்தவுடன் எளிதில் அடையாளம் காண உதவும், அவற்றின் உடலமைப்பின் முக்கியமான அம்சங்களை இங்கு காண்போம்.

By admin