• Mon. Feb 23rd, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் அதிக நன்கொடை வழங்குவது செல்வந்தரா, சாமானியரா? புதிய வெளிச்சம் தரும் ஆய்வு

Byadmin

Feb 23, 2026


இந்தியா, கொடை, நன்கொடை, குடும்பங்கள், தானம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் தானம், கொடை போன்றவை மேல் மட்டத்திலிருந்து கீழ் நோக்கி செய்யப்படுகிறது என்றே கூறப்பட்டு வருகிறது.

இந்த அடுக்கில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சி.எஸ்.ஆர்) நிதிகள், செல்வந்தர்கள் மற்றும் நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகள் வருகின்றன. ஆனால் புதிய ஆய்வறிக்கை ஒன்று இந்த புரிதலை மாற்றியமைப்பதாக இருக்கிறது. இந்தியப் பெருந்தன்மையின் இயக்கு விசை என்பது மிகவும் சாதாரணமான, ஆனால் பரந்துபட்ட ஒன்றாக உள்ளது.

அசோகா பல்கலைக்கழகத்தில் உள்ள சமூக தாக்கம் மற்றும் தொண்டுக்கான மையம் தயாரித்துள்ள இந்தியாவில் தானம் – 2025 (How India gives 2025) என்ற அறிக்கை புதிய பார்வையை வழங்குகிறது. நன்கொடைகளில் நிறுவனங்களின் பங்கை விடவும் தனிநபர் மற்றும் குடும்பங்களின் பங்கே அதிகமாக உள்ளதை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இந்த ஆய்வறிக்கையின்படி, இந்திய குடும்பங்கள் பங்களிப்பு மற்றும் தன்னார்வ தொண்டு மூலமாக வழங்கும் ஒட்டுமொத்த நன்கொடையின் மதிப்பு ஆண்டு ஒன்றுக்கு 540 பில்லியன் ரூபாயாக (6 பில்லியன் டாலராக) உள்ளது.

இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 68% பேர் ஏதாவது ஒரு விதத்தில் நன்கொடை வழங்கியதாக தெரிவிக்கின்றனர். இதில் 48% பேர் உணவு, ஆடை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கியுள்ளனர், 44% பேர் நிதியுதவி அளித்தும் 30% பேர் லாப நோக்கமற்ற நிறுவனங்கள், மத நிறுவனங்கள் அல்லது சமூக குழுக்களில் தன்னார்வ பணி செய்துள்ளனர்.

By admin