• Mon. Oct 14th, 2024

24×7 Live News

Apdin News

இந்தியாவில் அவசர கருத்தடை மாத்திரைகளை மருந்தகங்களில் நேரடியாக வாங்க தடை வருமா?

Byadmin

Oct 14, 2024


அவசர கருத்தடை மாத்திரைகள் தடை

பட மூலாதாரம், Getty Images

அவசர கருத்தடை மாத்திரைகள் உட்பட அனைத்துவிதமான ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளை மருந்தகங்களில் மருந்துச்சீட்டு இல்லாமல் பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்படுமா?

நாடு முழுவதும் இந்த தடையை மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.சி.ஓ) அமல்படுத்தக் கூடும் என்று வெளியான செய்திகளால் தற்போது அவசர கருத்தடை மாத்திரைகள் தொடர்பான விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.

இந்த மாத்திரைகளை நேரடியாக மருந்தகங்களில் வாங்க தேசிய அளவில் தடை ஏற்படலாம் என்று பெண்களும், பெண்கள் நல ஆர்வலர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர். தேவையற்ற கர்ப்பத்திற்கு இந்த தடை வழிவகை செய்யும் என்றும், இது பெண்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை இணை இயக்குநர் எம்.என். ஶ்ரீதர் பிபிசி தமிழிடம் பேசிய போது, “பெண்கள் இதுபோன்ற மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது பக்கவிளைவுகளை சந்திக்கின்றனர். அதனால்தான், முன்பு இதனை மருந்தகங்களில் விற்க அனுமதி இல்லாமல் இருந்தது,” என்று தெரிவித்தார்.

By admin