• Wed. Oct 16th, 2024

24×7 Live News

Apdin News

இந்தியாவில் இரண்டே நாட்களில் 10 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – என்ன நடக்கிறது?

Byadmin

Oct 16, 2024


ஏர் இந்தியா, இண்டிகோ, விமானம், வெடிகுண்டு மிரட்டல்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 48 மணி நேரத்தில் 10-க்கும் அதிகமான இந்திய விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இதனால், விமானப் பாதைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும், பல விமானங்கள் தாமதமாகச் சென்றன.

செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, அந்த விமானத்தை மக்கள் அதிகம் இருக்கும் பகுதிற்கு அப்பால் அழைத்துச் செல்ல சிங்கப்பூர் விமானப்படை இரண்டு போர் விமானங்களை அனுப்பியது.

அதற்குச் சில மணி நேரத்திற்கு முன்பு, டெல்லியில் இருந்து சிகாகோ செல்லும் ஏர் இந்தியா விமானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கனடா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வெடிகுண்டு மிரட்டல்கள் – என்ன நடக்கிறது?

இந்தியாவில் விமான நிறுவனங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாகவே இருக்கிறது. ஆனால், திங்கள்கிழமை (அக்டோபர் 14) முதல் திடீரென இது அதிகமாக நடப்பது ஏன் என்று தெளிவாகத் தெரியவில்லை.

By admin