• Thu. Jan 22nd, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் இலங்கை நீதிபதிகளுக்கான விசேட திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம்!

Byadmin

Jan 22, 2026


இலங்கையைச் சேர்ந்த 30 மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளுக்கான விசேட திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் இந்தியாவின் போபாலில் உள்ள தேசிய நீதித்துறை கழகத்தில் ( Indian National Judicial Academy)  நடைபெற்றது.

இலங்கை உயர்நீதிமன்றம் மற்றும் இலங்கை நீதிபதிகள் நிறுவகத்தின் கோரிக்கைக்கு இணங்க இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தலைமையில் இந்த விசேட திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் நடைபெற்றது.

ஜனவரி 12 முதல் 16 ஆம் திகதி வரை நடைபெற்ற இந்தப் பயிற்சித் திட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த 30 மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் பங்குபற்றினர்.

அத்துடன் இந்த பயிற்சித் திட்டத்தின் போது, கலாசார ரீதியான அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பல இடங்களுக்கு கல்விச் சுற்றுலாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பிரதமர் நரேந்திர மோடி 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட போது அறிவித்த திறன் மேம்பாட்டு கட்டமைப்பின் கீழ் இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

By admin