• Wed. Apr 1st, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் மாற உள்ள வருமான வரி, சம்பளம், ரயில்வே டிக்கெட் உள்ளிட்ட 8 விதிகள் எவை?

Byadmin

Apr 1, 2026


கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஏப்ரல் 1 முதல் மாற உள்ள முக்கிய 5 விதிகள் எவை?

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் நாட்டில் சில விதிகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன, இந்த ஆண்டும் அவ்வாறே நடக்கும்.

நாளை, அதாவது 2026 ஏப்ரல் 1 முதல், வருமான வரி, ரயில்வே டிக்கெட், ஃபாஸ்டேக் மற்றும் கிரெடிட் ஸ்கோர் தொடர்பான சில நடைமுறைகளின் விதிகள் மாறும்.

ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வரும் விஷயங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

1. வருமான வரியின் புதிய விதிகள்

புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

முதலாவதாக வருமான வரி பற்றிப் பார்ப்போம். ஐடிஆர் (ITR) தாக்கல் செய்யும் விதிகளில் மாற்றம் இருக்கும்.

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம், 2025 அமலுக்கு வரப்போகிறது, இது 1961-ஆம் ஆண்டின் பழைய வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக அமையும்.

By admin