• Fri. May 16th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதை டிரம்ப் ஏன் விரும்பவில்லை?

Byadmin

May 16, 2025


'இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதை விரும்பவில்லை'  என்று டிம் குக்கிடம் டிரம்ப் ஏன் இப்படி கூறினார்?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், நிகில் இனாம்தார்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகள் அனைத்தையும் கைவிட இந்தியா முன்வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்திய செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசியுள்ள இந்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று கொண்டு இருக்கின்றன, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

கத்தார் தலைநகர் தோகாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட டிரம்ப், இந்திய அரசாங்கம் “எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அவர்கள் அடிப்படையில் எங்களிடம் எந்த வரியும் வசூலிக்கத் தயாராக இல்லை” என்று கூறினார்.

டிரம்ப் கூறிய கருத்துக்கு முரண்பாடாக ஜெய்சங்கர் தெரிவித்த கருத்து உள்ளது.

By admin