• Sun. Dec 14th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவில் ஒரு சதவீதம் பேர் வசம் 40% செல்வம் – உலக சமத்துவமின்மை அறிக்கை கூறுவது என்ன?

Byadmin

Dec 13, 2025


உலக சமத்துவமின்மை அறிக்கை, இந்தியா, ஏழை-பணக்காரர் இடைவெளி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகின் ஒவ்வொரு துறையிலும், அதிகமாக வேலை செய்த பிறகும் பெண்கள் ஆண்களை விட குறைவாகவே சம்பாதிக்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது (மாதிரி படம்)

ஏழை – பணக்காரர் சமத்துவமின்மை வரிசையில் முன்னிலையில் இருக்கும் உலக நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று தற்போது வெளியாகியுள்ள ஒரு சர்வதேச அறிக்கை கூறுகிறது.

பொருளாதார வல்லுநர்களான லூகாஸ் சான்செல், ரிக்கார்டோ கோமஸ்-கரெரா, ரோவைடா மோஷரிஃப் மற்றும் தாமஸ் பிக்கெட்டி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ‘உலக சமத்துவமின்மை அறிக்கை 2026‘ (World Inequality Report 2026) இல் வருமானம் மற்றும் சொத்து குறித்த தரவுகள் இடம் பெற்றுள்ளன.

இந்திய மக்கள்தொகையில் 10 சதவீதத்தினர் மட்டுமே இந்தியாவின் மொத்த வருமானத்தில் தோராயமாக 58 சதவீதத்தை ஈட்டுகிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

மக்கள் தொகையில் கீழ் அடுக்கில் உள்ள 50 சதவீதத்தினர் இந்தியாவின் வருமானத்தில் 15 சதவீதத்தை மட்டுமே ஈட்டுகிறார்கள் என்கிறது அந்த அறிக்கை.

இந்தியாவில் சமத்துவமின்மை, வருமானத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை, செல்வத்தில் உள்ள இடைவெளியும் இன்னும் ஆழமாகி இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

By admin