• Fri. Jun 27th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவில் ஒரே நாளில் உருவாகும் 743 டன் உயிரி மருத்துவக் கழிவுகள் என்னவாகின்றன தெரியுமா?

Byadmin

Jun 27, 2025


காணொளிக் குறிப்பு, இந்தியாவில் ஒரே நாளில் உருவாகும் 743 டன் உயிரி மருத்துவக் கழிவுகள் என்னவாகின்றன தெரியுமா?

இந்தியாவில் ஒரே நாளில் உருவாகும் 743 டன் உயிரி மருத்துவக் கழிவுகள் என்னவாகின்றன?

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 16 கோடி ஊசிகள் செலுத்தப்படுகின்றன. இவற்றில் பல முறையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை.

இதனால், 33,800 பேருக்கு எச்.ஐ.வி தொற்று, 17 லட்சம் மக்களுக்கு ஹெபடைட்டிஸ் பி மற்றும் 3,15,000 பேருக்கு ஹெபடைட்டிஸ் சி பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) புதிய அறிக்கையின்படி, இந்தியாவில் உயிரி மருத்துவக் கழிவுகள் பொதுவான உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு வசதிகள் (Common Biomedical Waste Treatment Facilities) மற்றும் கேப்டிவ் சிகிச்சை வசதிகள் (Captive Treatment Facilities) மூலம் சுத்திகரிக்கப்படுகின்றன அல்லது அகற்றப்படுகின்றன.

சில மருத்துவமனைகள் தங்களுக்கான சொந்த கேப்டிவ் சுத்திகரிப்பு வசதிகளையும் வைத்துள்ளன. டெல்லியில் இரண்டு பொதுவான உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு வசதிகள் மற்றும் ஒரேயொரு கேப்டிவ் சிகிச்சை வசதிகள் மட்டுமே உள்ளன.

இந்தியாவில், ஒரே நாளில் 743 டன் உயிரி மருத்துவக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன, 694 டன் அப்புறப்படுத்தப்படுகின்றன. ஆனால் எஞ்சிய உயிரி மருத்துவக் கழிவுகள் என்னவாகின்றன?

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin